Friday, April 9, 2010

எட்டு மறுப்புகள் பல இருக்கலாம்கள்

கவிதையை வாசிக்க வரும் நண்பர்களுக்கு,

ஒரு சின்ன மனக்கணக்குடன் தான் இக்கவிதையைப் பதிவேற்றினேன். நூறு பேர் படித்தால் போதும் என்பதே அந்தக் கணக்கு. மற்றபடிக்கு மாஸ் லெவலில் இக்கவிதையைக் கொண்டு செல்லுகிற நற்செய்தி நோக்கமோ இதனால் கவிதை சுட்டிய பெண்—நிலம்—காடு--இயற்கை—உடலிச்சை Vs. ஆண்—மழை—ஆக்கிரமிப்பு--கலாச்சாரம்--அதிகாரம் போன்ற இணைமுரண்களோ மாறிவிடும் என்கிற நம்பிக்கையோ எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக்கவிதை தமிழ்க் கவிதைச்சூழலில் ”பெண்மொழி” என்று நிலவும் சிலபோக்குகளைக் குறித்த ஒரு commentarial gesture. முக்கியமாக பெண் உடல், உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் தேய்ந்துபோகிற அளவுக்கு—யோனி என்ற சொல்லில் யோ என்ற எழுத்தின் கால் பாதி காணோமாம்—பயன்படுத்தப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இந்த gesture, அந்த அளவிலேயே முக்கியம். மேலும், பெண் உடல் பேசுபொருளாகியிருக்கிற அளவுக்கு ஆண் உடல் ஏன் பேசுபொருளாகவில்லை? Object பெண்ணுடலாகவே பெரும்பாலும் இருப்பதும் அதைநோக்கியே எழுத்துகளை வாசிப்பவரின் gaze செயல்படுவதும் எப்படி? இந்த யோசனையும் கூடவே இருந்தது.

கவிதை பதிவேறி இப்பொழுது வரை நூற்றி ஐம்பது ஐ.பி முகவரிகளிலிருந்து வருகைகள் பதிவாகியிருக்கின்றன. போதும். வாசித்தவர்களுக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.
பெண்-உடல்-மொழி பற்றிய கட்டுரை பகுதிகளில் வெளிவரும். வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பெருந்தேவி

7 comments:

Kavitha said...

:) நல்ல கவிதை. நுணுக்கமான அரசியல் தெரிகிறது...

Perundevi said...

நிறைய வருடங்களுக்கு முன்பு ஒருமுறை கோணங்கி அண்ணா (அவருக்கு நன்றி) ஒரு எழுத்தாளரின் தன்முனைப்பு பற்றிப் பேசும்போது, ”கட்டில் நிறைய படுத்ததுமாதிரி“ என்றார். அதை நான் இன்னும் இன்னும் பெருக்கி அறை நிறைக்க மாற்றியிருக்கிறேன். மறக்கமுடியாத உருவகம்.

Perundevi said...

நிறைய வருடங்களுக்கு முன்பு ஒருமுறை கோணங்கி அண்ணா (அவருக்கு நன்றி) ஒரு எழுத்தாளரின் தன்முனைப்பு பற்றிப் பேசும்போது, ”கட்டில் நிறைய படுத்ததுமாதிரி“ என்றார். அதை நான் இன்னும் இன்னும் பெருக்கி அறை நிறைக்க மாற்றியிருக்கிறேன். மறக்கமுடியாத உருவகம்.

ஜமாலன் said...

புள்ளிகளை யாரவாது நிரப்ப லாம்?... இது மற்றொரு லாம்.. பெண் ஆணாகவும் இருக்காம். ஆண் பெண்ணாகவும் இருக்கலாம். இப்படியாக இன்னும் பல லாம்கள்... அதென்ன எட்டு?

கொலைவெறி்க் கவிதையாக உள்ளது )))

vasu said...

:)-
கருத்து சொல்லவே பயமாக இருக்கிறது. வடிவேலு பாணியில் " ஒரு குரூப்பாக தான் அலைகிறீர்களால் போலிருக்கிறது!!! ரூம் போட்டு யோசிப்பாய்களோ!!" :)-

Perundevi said...

@Jamalan, பெண் ஆணாகவும் இருக்கலாம், ஆண் பெண் ஆகவுமிருக்கலாம், சரி தான். இட்டுநிரப்பி கவிதை வரைக.
@வாசு, நீங்கள் நான் அறிந்த, டிசம்பரில் என்னோடு விஷ்ராந்தி பவனில் காப்பி சாப்பிட்ட வாசுவா? தெரியவில்லை. நான் எந்த க்ருப்-பிலும் இல்லை. இக்கவிதை நிலம் மழை, இயற்கை கலாச்சாரம், பெண் ஆண் என்று கட்டப்படும் இணைமுரண்களைக் கலைக்கும் பின்னமைப்பியல் தத்துவப்பின்னணியின் பார்வையில் எழுதப்பட்டது. நான் அறிந்த வாசுவாக இருக்கும்பட்சத்தில் உங்களிடமிருந்து இன்னும் பயனுள்ள பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

vasu said...

மீண்டும் வடிவேலு பாணியில்,
ஏற்கனவே அவிங்களுக்கும்,நமக்கும் வாய்க்கா தகராறு. ஏம்பா நான் சரியாத்தானே பேசிக்கிட்டு இருக்கேன்.
எந்த‌ வாசு
எந்த‌ விஸ்ராந்தி
என்ன‌ த‌த்துவ‌ம்
என்ன‌ ப‌ய‌னுள்ள‌
என்ன‌ பின்ன‌மைப்பு
இந்த‌ ப‌ஞ்சாய‌த்து எதில் போய் முடியுமோ?