Friday, January 1, 2010

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

--கவிதை நீக்கப்படுகிறது--

12 comments:

யாத்ரா said...

இந்தக் கவிதையின் கனம் தாங்கவியலாததாயிருக்கிறது.

Perundevi said...

யாத்ரா, என் சமீபத்திய கவிதைகளில் எனக்குப் பிடித்ததாக இக்கவிதை இருக்கிறது. எழுதிமுடித்தவுடன் இக்கவிதை பற்றி யோசித்தேன். ஒற்றைமரம், ஒரே இலை, அது கடக்க நேர்ந்த இலக்கற்ற முடிவற்ற பெரும் வீழ்ச்சி....கனம்தான்.

TCTV said...

moondru varigalil oru sollaviyalaatha perunth thunbam manathinul

ஜமாலன் said...

அருமையான கவிதை... தலைப்பு கவிதையின் பரிமாணத்தை ஒரு குறிப்பிட்ட உணர்வுக்குள் இறுத்துவதாக உள்ளது.

இருந்தாலும் ஒரு கணம் என்பதின் விரிவடையும் காலப்பரிமாணம் கவிதைக்கு வேறுமாதிரியான அனுபவத்தை தருகிறது.

ஒற்றை மரத்தில் ஒற்றை இலை என்பது ஒரு புதிய படிமமாக உள்ளது. சாத்தயர் என்பது பதிய சொல்லாட்சியாக உள்ளது. மரத்திற்கும் புமிக்கும் இடையில் பயணப்படும் காலம் முக்கியம்...

Perundevi said...

சொர்ணவல்லி, மூன்றோ முப்பதோ வரிகளைத்தாண்டியும் கவிதை சுட்டும் உணர்வு நிற்கவேண்டும். அதுதான் கவிதையின் சவால்.

ஜமாலன், ஆமாம், கணம் ஒன்று நம், நமக்கு முந்தைய பிந்தைய பல செவ்வியல் கணங்களின்--பிரிவு, சாவு, பாசம் போன்று-- ஒரு பிரதிநிதியாக தன்னைக் காட்டும்போது இப்போதைக்கும் எப்போதைக்குமான ஒரு உணர்வு நம்மில் நிறைகிறது்.இலைகள் விழத்தானே. உற்ற அன்புறவில் பிரிவு அப்படியொரு செவ்வியல் கணமே. சிவாஜிகணேசனின் சில படங்கள், கண்ணதாசனின் பாடல்கள் தம்மை நிறுத்திக்கொள்ளும் இடங்களும் இத்தகைய கணங்களை நம்மில் மீட்டித்தான். நவீன கவிதை இவ்வுணர்வை அர்த்தம் நீக்கிச் சமைக்கிறது. பூமியே இல்லாதபோது மரத்தின் வேர் எங்கே இருக்கும்? கற்பனாதீத மரம், இல்லாத பூமி, விழுவது மட்டுமே நேர்வது...வெர்டிகோ.

Perundevi said...

ஜமாலன், அப்புறம் தலைப்புக்கும் உணர்வுக்குமான முரண் ......நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். :)

padmanabhan said...

nice poem. do write more like this

anujanya said...

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் விரிவடையும் உலகம். சமீபத்தில் படித்ததில் ஆகச் சிறந்த கவிதை.

அனுஜன்யா

Perundevi said...

வாசித்த நண்பர்களுக்கு நன்றி.
அனுஜன்யா, வெகுநாள் சென்று உங்களை இங்கே பார்க்கிறேன். மகிழ்ச்சி. சில கவிதைகள் ஒளிக்கீற்றுகளாக அமைந்துவிடுகின்றன.

N Kalyan Raman said...

கனமாகவே இருக்கிறது.

இன்னொரு ஜப்பானிய ஹைகூ நினைவுக்கு வருகிறது.

Loneliness

No earth at all
No sky at all - and still
The snowflakes fall!

Perundevi said...

கல்யாண், ஜப்பானிய ஹைகூ நன்றாக இருக்கிறது. நன்றி.

ரௌத்ரன் said...

முன்பே வாசித்தது தான் எனினும்..இப்பொழுது,இந்த கனத்தில் இன்னும் சுமை கூட்டுவதாக இருக்கிறது...வீழ்ந்து கொண்டேயிருக்கும் இலை...ரொம்ப நல்ல கவிதை.