Wednesday, February 9, 2011

கண்ணாமூச்சி

8 comments:

Perundevi said...

முகநூலில் நடந்த உரையாடலிலிருந்து இங்கே ஒட்டுகிறேன்.

Appadourai Arvind சொன்னது:
Very good spatial poetry. The reader becomes poet. I have a feeling of having found the Universe of a old tamil song...Kalaimagal Kai Porule....And also the war...and more.

Jamalan Jahir Hussain சொன்னது:
என்ன ஆச்சி? புது முயற்சியா? வாழ்த்துக்கள். எனக்கு புரியவில்லை. எல்லாம் புரியவேண்டியது அவசியமும் இல்லை. இடையீட்டுப்பிரதிகளாக உள்ளது. இது கண்ணா மூச்சி ஆட்டமா? அல்லது கண்ணைக் கட்டி மூச்சை பிடிக்கும் ஆட்டமா? அருணகிரிநாதரைப்போல சித்திரக்கவியா? தொடருங்கள். அடுத்த தொகுப்பிற்கான வடிவ மாற்றமா? :) :

Perundevi said...

Perundevi பெருந்தேவி சொன்னது:

‎@அப்பாதுரை அர்விந்த், நல்ல விளக்கம். புரிந்துகொள்ளலுக்காக வாசகர் பிரதி உருவாக்கிய தனக்கே நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும்.
@ஜமாலன், அர்விந்த் கொடுத்திருக்கும் சமிக்ஞையை பின் தொடருங்கள் என்று சொல்லவிரும்பவில்லை. உங்களுக்கே புரியவில்லை என்பது உங்கள் லீலை.
@வாசிப்பவர்களுக்கு, “மரண அறிவிப்பு” “உறைந்து விட்டது மொழி” இவற்றில் பெறலாம் சில வெளிப்படையான பொருள்கோட்டு (quote-ட்டு) விளையாட்டை.
@கருத்திட்ட நண்பர்களின் கருத்தை வலைப்பூவுக்கு மாற்ற எனக்கு அனுமதி உண்டா?

Perundevi said...

Perundevi பெருந்தேவி சொன்னது: ‎@ஜமாலன், அருணகிரிநாதர் கலைமகள் கைப்பொருளே என்று சுசீலா குரலில் பாடினாரா :), எழுவாய்-பயனிலை இலக்கணக் கமிசார்களைக், திருட்டுப்பூனைகளைக் கூறினாரா :).... உச்சத்தில் செம்மொழி விடுபட்டது கவிதையில்

Perundevi said...

Jamalan Jahir Hussain said:

‎@பெருந்தேவி... எனக்கு அரவிந்தன் கமெண்டுகூட புரியவில்லை. ஒருவேளை நான் இன்னும் வளரனுமோ? காம்பளான் குடித்து பார்க்கலாம். ))

அருணகிரிநாதர் பாடலை பலரும் பாடி உள்ளனர். சுசீலா பாடியதாக தெரியவில்லை. கலைமகள் கைப்பொருளேவா? அப்படின்னா? வசந்த மாளிகையில் வாணிஸ்ரீ கையில் வைத்திருப்பதா? எனக்கு சிவாஜி கையில் வைத்திருப்பதுதான் நினைவிற்கு வருகிறது. ))

ஆமா லீலை என்றால்.. சித்தாந்தம் சொல்லும் லீலையா?
அல்லது அவனின் அளகிலா விளையாட்டா? )))

வேண்டாம் விட்டுடுங்க.. அழுதுறுவேன். ஹா ஹா...
நல்லாத்தான் போகுது. இங்க எதற்கு காமெடி பண்ணிகிட்டு. விளக்கம் தெரிந்த அரவிந் போன்ற நண்பர்கள் சொல்ல வழிவிடுவோம். அப்புறம் புரிகிறதா எனப்பார்க்கலாம்.

Perundevi said...

Lakshmi Chitoor Subramaniam said:

இறைந்து கிடக்கும் சொற்களை எப்படி வேண்டுமானாலும் அள்ளலாம். ஒன்றொன்றாக, கைப்பிடியில், இரு கைகளில், காலால் தள்ளி, அதில் உருண்டு பிரண்டு என்று எப்படி வேண்டுமானாலும். வாழ்வுக்கு நம் வாழ்தல் பலவித அர்த்தங்களைத் தருவது போல் சொற்களும் கிடக்கும் கைகளுக்குகேற்ப மாறும். சொல்லைக் குரல் மாற்றிவிடுவதுபோல் குரலால் சொல் வேறு தளங்களுக்குப் போவதுபோல். தொடாவிட்டால் சொல் வெறுமே கிடக்கும்.

Perundevi said...

Perundevi பெருந்தேவி said:
‎@ [Lakshmi or] அம்பை, நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே காட்சிப்படுத்திப்பார்த்தால்கூட பிரமாதமாக உள்ளது. குரலால் சொல் வேறுதளத்துக்குப் போய்விடும், “போடீ” என்ற சொல்லை என்னிடம் சொன்ன குரல்களை யோசித்துப்பார்த்தேன். ஹாஹா

Unknown said...

ஆ`சிறியர்`
வார்தை போன்றவை உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட வழுக்களா பெருந்தேவி?

Perundevi said...

ஆம், ஹரி. அடுத்த வரிகள் இவற்றைத் தெரிவிக்கக்கூடும். வார்தை தவறுதல், வாசக யாசகருக்கு எதிரிடையாய் (அ) வாசக யாசகரை எதிர்பார்க்கும் ஆசிறியர்.