Monday, September 22, 2008

க்ராஸ் டாக்

(அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப்போச்சு
சிரிப்பா சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்கு காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவது தான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையை காலை வச்சுக்கிட்டு சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரிச் சும்மா டைம்பாஸ¤க்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப்பெரிய பெரிசு தான்
ஆமாமாம் மிகப்பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாகூட
மார்க்வெஸ் தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக்காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

8 comments:

Anonymous said...

யப்பா அது 0 டிகிரின்னா இது 360 டிகிரியாவுள்ள இருக்கு.

Unknown said...

this is cris(is)-cross talk :).

ஜமாலன் said...

//இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்//

ஏனிந்த கொலைவெறி? நல்லா கிளப்பறாளுவடா பீதிய...

தொலைபேசி ஒட்டுக்கெட்டு ஆட்சிகளே கவிழ்ந்த நாடு... அந்த குறுக்கச்சால் ஓட்டிய தொலைபேசியைத் தாருங்கள். இன்னும் பல சுவராஸ்யமான குரலைக் கேட்கலாம்..

Perundevi said...

நன்றி வடகரை வேலன், ஏபி.

//ஏனிந்த கொலைவெறி? நல்லா கிளப்பறாளுவடா பீதிய...//

தல, உங்க உடல் அரசியல் கோஷ்டியில நானும்தானே உண்டு. அப்புறம் என்ன பீதி?

ZillionsB said...

Get your blog listed on http://www.valaipookkal.com to reach a larger audience for your writings.

யாரோ said...

எக்கோவ் ....நல்ல கான்செப்ட் ...ஆனா படிச்சு முடிக்கையிலே தலைஇலே முடி தான் மிச்சம் இருக்குமா தெரியல்லே ....

நானும் ஒரு வலை பதிவு பண்ணிருக்கேன் பாருங்களேன்...
http://valaikkulmazhai.wordpress.com
கார்த்தி

கோநா said...

பெருந்தேவி, டி.வீ. ரிமோட் கையில் வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி சேனல் பார்த்த மாதிரி இருந்தது.

குறுக்குசால் என்றிருக்க வேண்டுமோ?

Perundevi said...

கோநா, நான் வளர்ந்த கடலூரில் குறுக்குச்சால் ஓட்டுதல் என்றுதான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
டி.வி. ரிமோட் நல்ல உதாரணம்.
பெருந்தேவி