அனுஜன்யா, எழுதும் கவிதைகளைப் படிக்க ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை விட கவிஞருக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது? கவிதைகள் சில சமயம் சாத்தியிருக்கும் வீடுகளைப் போலத்தான். (சாத்தியிருப்பவை தான், பூட்டியிருப்பவை அல்ல). அவை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம், திறக்கும். தெருவில் நடக்கும்போது ஏதோ ஒன்றால் நாம் சில வீடுகளால் கவரப்படுகிறோம், திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது.
அப்புறம், “அடிக்கடி கவிதையாவது எழுதலாம்” என்றால் என்ன? கவிதை எழுதுவது எந்த வகை எழுத்தையும் விட சிரமம். மொழியின் கொதிநிலையில் மட்டுமே கவிதை தன்னை வார்த்துக்கொள்ளும். ஆனால், நமது ஊரில் கவிதை என்பது எழுத்தின் முதல்படி என்பது போல ஒரு பிரமை நிலவுகிறது. நான் பேசிப்பார்த்தவரை சில கவிஞர்களே கூட அப்படி நினைப்பதாகத்தான் தெரிகிறது. என்ன செய்வது, நம் சூழலில் இருக்கும் எத்தனையோ கோளாறான ’புரிதல்களில்’ இதுவும் ஒன்று. ஒருவேளை, நீங்கள் வேறு அர்த்தத்தில் இதை சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.
நான் சொல்லியது 'கோளாறான புரிதல்' தோற்றம் தருவது உண்மைதான். ஆனால் நான் சொல்ல வந்தது, உங்கள் வேலைப் பளுவில் நீங்கள் எத்தனையோ எழுதி, பதிவேற்ற நேரமில்லாமல் இருக்கலாம். அல்லது, கவிதைகள் முன்னமே எழுதி வைத்து, பிறிதொரு தருணத்தில் பதிவிட எண்ணியிருக்கலாம். அவற்றில் கவிதைக்கு முன்னிடம் கொடுங்கள் என்று சொல்ல வந்தேன். கவிதை எழுதுவதன் சிரமம் நிச்சயம் எனக்குத் தெரியும்.
'மொழியின் கொதிநிலை!' - கவிதையை கவிதையாக விவரிக்கும் ஒரு sublime expression.
இல்லை, அனுஜன்யா. தவறு என்மேல்தான். இங்கே தமிழ்ச்சூழலில் தொடர்ந்து கவிதை பற்றிய ஒரு கிண்டல் தொனிக்கும் வெறுப்புப்பேச்சு பரவி வருகிறது. போதாததற்கு, அவரவர்களுக்கு “அருகாமையில்” இருக்கிற கவிதை எழுதாத கவிஞர்களை லிஸ்ட் செய்யும் வேலையும். அதனால்தான், நீங்கள் சொன்னதை நான் அப்படி புரிந்துகொண்டேன்.
4 comments:
நீங்க திரும்ப எழுதியதில் மிக மிக மகிழ்ச்சி. உங்களுடைய சில கவிதைகள் சுகமான அவஸ்தை. ஒரு பதினஞ்சு தடவ படிச்சா இலேசா திரை விலகுரமாதிரி இருக்கும்.
திரும்ப வரேன். கொஞ்சம் பல்பு எறிந்தால், பின்னூட்டம் போடுகிறேன் :)
கொஞ்சம் அடிக்கடி கவிதையாவது எழுதலாம் நீங்க.
அனுஜன்யா

Post a Comment