பிரசன்னம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது மீண்டும்
அலமாரித்தட்டுகளைத் துடைக்கிறது கடைகளை மூடுகிறது.
ஆன்மாவின் நண்பரே ஆன்மாவின் எதிரியே
ஏன் என்னுடையதை நீங்கள் விரும்புகிறீர்கள்?
கிராமத்திலிருந்து கப்பம் கொண்டுவா
ஆனால் உங்கள் வெள்ளத்தில் கிராமமே போய்விட்டதே.
அந்தத் துடைக்கப்பட்ட இடமே வேண்டியது எனக்கு.
பின்னால் மறைந்துகொள்ள கதவற்ற
வெட்டவெளியில் வாழ். இரு சுத்த இன்மையாய்.
அந்நிலையில் ஒவ்வொன்றுமே அவசியம்.
இதன் மீதியை மௌனத்தில் சொல்லவேண்டும்
ஒளிக்கும் ஒளியைச் சொல்ல முயலும் வார்த்தைகளுக்கும்
இடையிலான பிரம்மாண்ட வித்தியாசத்தால்.
(“A Cleared Site.” The Essential Rumi, translations by Coleman Barks with John Moyne. ஜப்பான் எனக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கான ஒரு வடிகாலாய் இதை மொழிபெயர்த்தேன். இது முதல்வரைவு.. தமிழில் தலைப்பு அவ்வளவாக உவக்கவில்லை.)
2 comments:
இந்தியாவில் பரப்பப்படும் பொய்யும் புனைசுருட்டும்: :(
http://economictimes.indiatimes.com/news/politics/nation/japan-nuclear-crisis-no-nuclear-accident-in-fukushima-say-indian-n-experts/articleshow/7708194.cms
நல்லதொரு கவிதையை சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள். ஜப்பானின் துயரம் உலகத்துயரமாக மாறிக்கொண்டிருக்கும் அவலச்சூழலில் இக்கவிதை அதனை இயற்கை மனித உரையாடலாக சொல்லிச்செல்கிறது. முதலாளித்துவத்தின் பைத்தியநிலை (சித்தபிரமை எனலாமா) இயற்கையின் பைத்தியநிலையாக மாறிவெளிப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
உலகமே அச்சம் கொண்டுள்ள இந்நிலையில் இந்திய அணு-அதிகாரவர்க்கம் எப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் பாருங்கள். ஜப்பான் அமைச்சகமே சொல்லாத ஒன்றை சொல்லும் துணிச்சல் இந்திய ஆளும் வர்க்கத்திற்குதான் உண்டு.
இக்கவிதையை நான் பேஸ்புக்கில் ஷேர் செய்கிறேன்.
Post a Comment