Saturday, July 9, 2011

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?

7 comments:

anujanya said...

//கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?//

ஹ்ம்ம்.

//சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை

விழுந்து கொண்டிருக்கிறது //
இந்த வரிகளுடனும் இணைத்து வாசிக்க முடிகிறது.

Perundevi said...

அனுஜன்யா, அப்படியா? எனக்கென்னவோ இந்தக் கவிதை வரிகளின் ஒட்டுதலின்மையும் ஏகாந்தமும் வேறு என்று தோன்றுகிறது.

கோநா said...

பெருந்தேவி,
ஒட்டுதலின்மையும், ஏகாந்தமும் சரிதான்.
அனுஜன்யா அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கவிதையில் "விழுந்துகொண்டிருக்கிறது" என்னும் வார்த்தை முடிவில்லாத தனிமைத் துயர் என்னும் எதிர்மறை உணர்வுக்குள் வாசகனைத் தள்ளிவிழ வைக்கிறது அந்த இலையைப் போலவே.
உங்கள் கவிதையில் வரும் அந்தரமும், வானமும் வேறுவேறு போல் தோன்றினாலும் வேறுவிதமாய் யோசித்தால் அவை இரண்டுமே ஒன்றுமற்ற வெளி என்ற ஒன்றையே சுட்டுகின்றன. அவ்வாறு யோசிக்கையில் எதிர் புள்ளியற்று ஒருபுள்ளியிலேயே ஆடும் ஊஞ்சல் என தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தரிசனத்தைக் கண்ட ஒரு சமாதி நிலைக்கு நிகரான ஏகாந்தத்தையும், ஒட்டுதலின்மை என்பதை விட பற்றற்ற மனநிலையும் சுட்டுகிறது இக்கவிதை.

Perundevi said...

கோநா, செழுமையான குறிப்பு இது. நன்றி. அனுஜன்யா இதைப் பார்ப்பார்/பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெருந்தேவி

anujanya said...

இன்றைக்குப் பார்த்து விட்டேன் :).

கோநா அவர்கள் அளவுக்கு அழகாக உணர்வுகளைச் சொல்லத் தெரியவில்லை. உணர்ந்ததை மட்டும் சொல்ல முடிந்தது.

Anonymous said...

படித்து முடித்தவுடன் வார்த்தைகளற்று நீண்ட மௌனத்தில் தள்ளுகின்ற கவிதானுபவத்தை தந்தது. நன்றி. ஊஞ்சலோசை காதுக்குள் இன்னும் கேட்கிறது.

Perundevi said...

Thanks Hemgan.