Thursday, June 10, 2010

கற்பனை செய்வேன் வாழ்வை நான்: E.E. Cummings (7)

சாதலுக்குத் தகுதி யில்லாததென வாழ்வைக்

கற்பனை செய்வேன் நான்,

ரோஜாக்கள் அவற்றின் அழகுகள்

வீணெனப் புகார்செய்தால்(செய்யும்போது).


ஆனால் மனிதகுலம் ஒவ்வொரு களையையும்

ஒரு ரோஜாவென்று தன்னைத்தானே நயப்பிக்கும்போது

ரோஜாக்கள் புன்னகைக்கமட்டுமே செய்யும்

(நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்)

4 comments:

நேசமித்ரன் said...

களைப்புல்லும் ?

Perundevi said...

நேசமித்ரன், அது weed. களை என்று போடலாமா, களைப்புல் என்று போடலாமா என்று யோசித்தேன்.....

Perundevi said...

நேசமித்ரன், இப்ப மாத்திட்டேன். களையைவிட களைப்புல் பெட்டர் என்று தோன்றுகிறது இன்னும்....

நேசமித்ரன் said...

நன்றிகள்!

இப்போது புரிகிறது களைப் புல் பொருதமானதாகத்தான் தோன்றுகிறது களை என்பதை விட ..