மரணத்துக்கு முன் உன் துரோகிகளையெல்லாம்
மன்னித்துவிடுவாய் என்கிற உன் நம்பிக்கை
நீயும் அப்படி மன்னிக்கப்படுவாய் என்கிற
பேராசைக்குமுன் ஒன்றுமேயில்லை.
கடைசிக் கதவத்தை
ஒரு இறைஞ்சல்
எல்லாக் கைகளோடும்
தட்டுகிறது.
அதிரமாட்டாமல் அதிர்கிறது
ஒரு தாளக்கொட்டோடு.
தொலைவில்தான்.
6 comments:
Nice one. தொலைவில் அதிர்வதற்கே இப்படியான கவிதையா?
மிக அருமை(இந்த சொல்லை கடந்தும் கவிதை பாராட்டுக்கு உரியது )
வேல் கண்ணன். நன்றி.
தொலைவில்தான், ஆனாலும்...
'இறைஞ்சலின்' கையறு நிலையை 'எல்லாக் கைகளும்' என்பதை விட சிறப்பாகச் சொல்லிவிட முடியுமா!! நல்லா இருக்கு பெருந்தேவி.
Thank you, Anujanya.
பெருந்தேவி,
கதவத்தை - வார்த்தையா அல்லது கதவதை என்பதன் தட்டச்சுப் பிழையா?
கோநா, கதவம்தான். தட்டச்சுப்பிழையில்லை.
Post a Comment