Wednesday, May 12, 2010

என் புனல்

--கவிதை நீக்கப்படுகிறது--

9 comments:

அ.முத்து பிரகாஷ் said...

என்னுள் இருக்கும் ஆணின் குரல் வளையை மெல்ல நெரிக்கிறது உங்கள் வார்த்தைகள் ...

நன்றி கோப்பெருந்தேவி!

Perundevi said...

நியோ, நன்றி.
நீங்கவேற, நான் இதுவரைக்கும் கோ அற்ற பெருந்தேவிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நளினத்தின் அருங்கரைகள் நைகின்றன//

அருமையாக இருந்தது .. ரசி்த்தேன்

Mubeen Sadhika said...

நீரைப் போல் சொற்களும் ஓடுகின்றன. அருமையான கற்பனை. சுழலும் படிமங்கள்.

அகநாழிகை said...

பெருந்தேவி, இக்கவிதை நிகழ்த்துகிற உணர்வுகள் அற்புதம். திரும்பத்திரும்ப வாசித்தேன். அருமை.

சில சந்தேகங்கள் :

நை என்ற ஒற்றை வார்த்தை இகழ்ச்சியான பொருளில் மட்டுமே கூறப்படுகிறது. நைகின்றன என்பதை அந்த பொருளில் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது நையல் - மெலிந்து போகுதல் என்ற அர்த்தமா?

0

/ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது/

இந்த வரிகளில் ‘பெண்‘ என்ற வரியில்லாமலே கவிதை அழகாக இருக்கின்றது.

0

/ நீர்க்கால்களை பரப்பி எழும்புகிறது /

அற்புதமான ஒரு காட்சியனுபவம்.

நீர்க்கால்களையூன்றியெழுகிறது என்று எனக்குப் பிடித்தமானதாக மாற்றி வாசித்துக் கொண்டேன்.

0

/ அஞ்சும் பாவனையில் அலைவுயரம்/

அலையுயரம் என்றிருக்கலாமோ?

சந்தேகம்தான்.

0

அருமையான ஒரு வாசிப்பனுபவம் ‘என் புனல்‘

- பொன்.வாசுதேவன்

நேசமித்ரன் said...

ரொம்ப நன்றிங்க இந்தக் கவிதைக்கு

Perundevi said...

நன்றி முத்துலட்சுமி, நேசமித்திரன்.
முபீன், சுழல் புனல், சுழல் படிமம்.
“அகநாழிகை” வாசு, நான் “நை” என்பதைப்பயன்படுத்தியது “தேய” “இற்றுப்போக” போன்ற அர்த்தங்களில்தான். அது வேறு அர்த்தத்தையும் தரலாம். ஆம், ”பெண்” தேவையில்லைதான்.
”பரப்பி” என்பது தருகிற நிலத்தில் பாய்ச்சல் வேறு. “ஊன்றி” என்பதன் ஆழம் இக்கவிதையின் தொனிக்கு ஏற்ப இருக்காது.
அப்புறம், “அலைவுயரம்” டைப் பிழை, திருத்திவிட்டேன். நன்றி, வாசு.

anujanya said...

இந்தப் புதுப் புனலில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். புனலைப் போன்றே பிரவாகமாகும் கவிதை. கவிதையாகும் புனல்.

//பழையவெள்ளத்தின் பயணம் தெரிந்தது//

இந்த வரிகளைத் தாண்டிச் செல்ல நேரம் பிடித்தது.

நளினத்தின் அருங்கரைகள்-ஒழுக்கத்தின் திண் தோள்கள், சரியின் புதைகுழிகள்- சரியற்றதன் மலர்கள், என்று ஆண்-பெண் பாலாரைச் சுழற்றி அடித்துச் செல்லும் வரிகள் பேராண்மையின் சில கூரைகளின் தடுமாற்றத்தை புனலின் சிரிப்பில் சொல்லும் இலாகவம்.. பெண்ணியம் எவ்வளவு நளினமாக, கம்பீரமாக வெல்கிறது!

Its like having Hennessy Cognac neat. வேறொன்றும் செய்ய முடியாது இன்று. நிச்சயமாக வேறு கவிதை படிக்க இயலாது இன்று. அவ்வளவு அடர்த்தி.

Please take a bow.

அனுஜன்யா

Perundevi said...

அனுஜன்யா, உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கும் ஒரு மார்கரீட்டா குடித்த திருப்தி. நன்றி. பெருந்தேவி