Sunday, May 23, 2010

நேற்று வெப்காமின் நீலச்சுடர் முன்னிலையில்

--கவிதை நீக்கப்படுகிறது--

21 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு பெருந்தேவி ...
ஒன்றும் சொல்லத் தெரியவில்லை ...
செய்ய முடிந்ததெல்லாம்
ஒரு மைனஸ் ஒட்டு போடுவது தான் ...
வருகிறேன் தோழி !

Perundevi said...

நண்பர் நியோ, நாகரீகமாக உங்கள் பிடித்தமின்மையைத் தெரிவித்ததற்கு முதலில் நன்றி. எதிர்-கவிதைக்கு மைனஸ் ஓட்டு கிடைப்பது சாலப்பொருத்தம். பெருந்தேவி

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் !

// நாகரீகமாக உங்கள் பிடித்தமின்மையைத் தெரிவித்ததற்கு முதலில் நன்றி. //
உங்கள் பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது என்பதை இதை விட யாரும் நாகரீகமாக சொல்லிவிட முடியாது ! ஆம் ! நீங்கள் கவிஞர் !

க பாலாசி தனது பதிவில் எனது இரு பின்னூட்டங்களை மட்டறுத்தார் .. அதற்கான அவரது காரணங்கள் அவரது பார்வையில் முழுக்க சரியானவை ... ஆனால் நீங்கள் உங்கள் வாசகனுக்கு துரோகம் செய்கிறீர்கள் ... அவனை வஞ்சிக்கிறீர்கள்...

// எதிர்-கவிதைக்கு மைனஸ் ஓட்டு கிடைப்பது சாலப்பொருத்தம். //
தற்கொலை செய்துகொண்டாலென்ன என்ற மன நிலை உடைய கல்லூரி மாணவன் உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது அவனை தற்கொலையை நோக்கி தூண்டுவதாக இழுத்துச் செல்வதாக உங்களின் வார்த்தைகள் இருக்கின்றன ...

கவிதை எதிர் கவிதை போன்ற சொல்லாடல்கள் நானறியாத ஒன்று... தற்கொலை உணர்வுகளை தூண்டி விடுவது தான் எதிர் கவிதையெனில் நானொன்றும் சொல்வதற்கில்லை ... பல தரப்பட்ட வாசகர்கள் புழங்கும் வெளியான இணையத்தில் எந்த ஒரு மரணத்திற்கும் காரணமாக உங்களின் வார்த்தைகள் அமைந்து விடக் கூடாது என்பதன் வெளிப்பாடே எனது மைனஸ் ஓட்டு...

"நியோ ...நீ ரொம்ப வளர வேண்டியிருக்கிறது தம்பி" என்று நினைத்தீர்களேன்றால் ஏற்றுக் கொள்கிறேன் தோழர் ....

Perundevi said...

நியோ, உங்கள் பின்னூட்டத்தை நான் எங்கே மட்டுறுத்தினேன்? அப்படியே போட்டிருக்கிறேன். பின் ஏன் உங்களுக்கு இத்தனை ஆத்திரம், எதற்கு பொய் சொல்கிறீர்கள்? கேரளாவில் வெப்காம் முன்னால் நடந்த பொறியியல் மாணவனின் தற்கொலை என்னைப் போன்ற கவிஞர்கள் கவிதை எழுதிதான் நடந்ததா என்ன? அல்லது அமெரிக்காவில் இதே போல வெப்காம்முன் நடந்த ஒரு தற்கொலையும் எழுத்தாளர்களால் நடந்ததா? கவிதையும் எழுத்தும் நடப்பவற்றுக்கான எதிர்வினை. சாட் ரூமில் பேசியபடி ஒரு இளைஞன் மரணிக்க, காவல்துறை உட்புக அப்போதும் அவன் நண்பர்கள் இறந்துகொண்டிருப்பவனோடு சாட் செய்ததை என்னவென்று சொல்வது? இந்தக்கவிதை இன்று இணையம் அதை உபயோகிப்பவர்களுக்குள் புகுத்தியிருக்கும் insensivity யைப் பற்றியது. அதற்கான ஒரு உரை. நான் சுட்டியிருக்கும் உலகத்தின் நடப்புகளை உங்களைப்போன்ற எல்லாரும் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்று சொல்லமுடியாது, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அடுத்தவர் மேல் அபாண்டமான குற்றச்ச்சாட்டுகளையும் வைக்கமுடியாது.

Perundevi said...

நியோ, இன்னொன்றும் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. என் கவிதையைப் பற்றிய விமரிசனங்களைப் பிரசுரிப்பதிலும் எனக்குத் தயக்கம் கிடையாது. ஆனால், உங்கள் பின்னூட்டத்தை அப்படியே நான் பிரசுரிக்கும்போது, மட்டுறுத்தினேன் என்று பொய்சொல்லும் உங்களைப் போன்ற வாசகர்கள் எனக்குத் தேவையில்லை என்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன். அடிப்படையான அறம் இல்லாதவர்களோடு உரையாட எனக்கு நேரமில்லை. விருப்பமும் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னவெல்லாம் செய்கிறார்கள்.
அந்த என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள் தான்
என்னவெல்லாம் செய்கிறார்கள்..

Thekkikattan|தெகா said...

its a shame :(( !!

அ.முத்து பிரகாஷ் said...

பெருந்தேவி அவர்களுக்கு ...

ப்ளாக் ஸ்பாட் ல் சில நாட்களாக நிலவும் பிரச்சனைகளை பற்றி டோண்டு அவர்கள் பதிவிட்டிருக்கிறார் ...
http://dondu.blogspot.com/2010/05/blogpot.html
வால் பையன் அவர்களுக்கு அவர் எழுதிய பின்னூட்டத்தை நேரமிருப்பின் படித்துப் பாருங்கள் ...

இப்போது நானிட்ட பின்னூட்டங்கள் காணக் கிடைக்கின்றன ...
நன்றி!
விடை பெற்றுக் கொள்கிறேன் !

ஜமாலன் said...

பிளாக் ஸ்பாட்டில் ஏதோ பிரச்சனை. இன்று எனது நண்பர் ஒருவர் அஞசல் அனுப்பி உள்ளார். எனது பிளாக்கிற்கு சப்ஸ்கிரைப் செய்ய முயன்று முடியாமல் போய் உள்ளது. அவரது கடிதம் .. உங்கள் பார்வைக்காக..

Dear Jamalan When i tried to subscribe for jamalantamil.blogspot.com that FeedBlitz's issues are very crisis bound that i send the verification text more than 6 times but i cant get it. so what?

நானும் இன்று உங்கள் பதிவிற்கு கமெண்ட் போட்டு ஒரு தகவலும் இல்லை. இது மட்டுறுத்தல் பிரச்சனை இல்லை. இணையத்தில் அல்லது வலை இணைப்புகளில் ஏதோ பிரச்சனை.

நண்பர் நியோ சுட்டியதைப்போல... டோண்டுவின் வலைப்பக்கத்தில் இது விவாதிக்கப்படுகிறது. அதனால் கமெண்ட் வரவில்லையே என்பதற்காக பிளாக்கர்களை குறைசொல்ல முடியாது. போகட்டும்.

ஜமாலன் said...

கவிதை நவீன டிஜிட்டலைஸ்ட் வாழ்வின் அவலம் பற்றிப் பேச தற்கொலை என்கிற துயரத்தை எடுத்துக் கொண்டு துவங்குகிறது. அதாவது, கவிதை தற்கொலையை விமர்சிப்பதாக உள்ளது. அதனால் தான் தற்ாகலைக்கான பல முயற்சிகளையும் ஒரு நாடகத்தைப்போல நிகழ்த்துகிறான் அவன் வெப்காமின் பார்வையாளருக்கு. இணையம் என்பது வாழ்வை எத்தனை அபத்தமாக மாற்றியுள்ளது என்பதை சொல்வதாகவும், தற்கொலை போன்ற கொடூரமான நிகழ்வுகள்கூட ஒரு வம்பளப்பாகவும் கமெண்ட என்கிற விளையாட்டாகவும் மாறிவிட்ட அபத்தம். உடல் உயிர் மனம் என்கிற எல்லாம் டிஜிட்டலைஸ் ஆகிவிட்ட உலகில் இணையம் என்பது ஒரு மொழியளவில் ஒரு தற்கொலைபாதையாக மாறிவிட்டது என்பதையே கவிதை சொல்கிறது. கவிதையின் உள்ளுறையில்.. தற்கொலை என்பது எத்தனை எளிமையானதாக, ஒரு காட்சிக்காண் இன்பமாக மாறிவிட்டது என்கிற அவலத்தை சொல்வதாக உள்ளது.

நண்பர் நியோ இதனை எதிர்மறையாக தூண்டுவதாக கற்பிதம் செய்து கொண்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்கொலை என்பது துயரம் என்கிற நிலையிலிருந்து மாறி ஒரு காட்சியின்ப அவலமாக உள்ளது என்பதே எனது வாசிப்பு.

இது தற்கொலையை தூண்டுவதாக சொல்வது என்பது அபாண்டம் என்றே சொல்லவேண்டும். கவிதையை தவறாக வாசிப்பதும், பிரதியை ஒரு மொழி-உண்மையாக கருதி உடன்பாட்டு நிலையில் வாசிப்பதுமே காரணம். அதாவது, பிரதியில் வரும் கேலி, கிண்டல் போன்றவற்றை ஆசிரியரின் உடன்பாட்டு கூற்றாக கருதி வாசிப்பது. எதிர்கவிதை என்பது எதிர்மனநிலையிலேயே பயணிக்கிறது. அதன் உட்கிடை ஒருவகை நையாண்டியும், அது ஏற்படுத்தும் அவலமும், அந்த அவலம் உருவாக்கும் துயரமும்தான். இது ஒருவகையில் பிளாக் ஹியமர் வகை அவல-நகைச்சுவை எனலாம். விரிவாக எழுத அஞ்சி விடுகிறேன்.

தற்கொலை என்பது ஒரு நிகழ்வு. இதில் வெப் காமில் புணரும் நிகழ்வையும், காதல் இன்னபிற நிகழ்வையும் பதிலீடு செய்தும் வாசிக்கலாம். கவிதை அதன் உயர்ந்தபட்ச அவல நிகழ்வாக தற்கொலையை எடுத்துக் கொண்டு உள்ளது.

நன்றி.

நேசமித்ரன் said...

அருமையான விளக்கம் ஜமாலன் சார்

மிக்க நன்றி

Perundevi said...

நன்றி முத்துலெட்சுமி. ஜமாலன் சொல்வதுபோல் அவலம் காட்சியாக மாறிவிட்ட சூழலில்தான் இருக்கிறோம்.
”அருமையான விளக்கம் ஜமாலன் சார் மிக்க நன்றி” என்று சொன்ன நேசமித்ரனுக்கு நன்றி.
:-) உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்ன ஜமாலன்? சரி, உங்களுக்கும் ஒன்று.

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு ஜமாலன் !

// ...அதனால் கமெண்ட் வரவில்லையே என்பதற்காக பிளாக்கர்களை குறைசொல்ல முடியாது... //
ஆமாம் தோழரே .... எனது பின்னூட்டங்கள் மட்டறுக்கப் பட்டது என்ற எனது முந்தைய பின்னூட்ட வரிகள் தவறான புரிதலால் எழுதப்பட்டவை என நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் ...

// நண்பர் நியோ இதனை எதிர்மறையாக தூண்டுவதாக கற்பிதம் செய்து கொண்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது //
தோழரே ... எனக்கு மிகப் பிடித்தமான கோவை கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பாகை ருசித்து சாப்பிட்டுக் கொண்டே நான் கேட்டு மகிழ்ந்த gloomy sunday பாடலை ஏன் எனது நண்பன் தற்கொலை செய்வதற்கு முன் பலமுறை கேட்டுஎதை ரசித்தான் என்பதும் ஆச்சர்யமாக தான் உள்ளது ....

// ...இது தற்கொலையை தூண்டுவதாக சொல்வது என்பது அபாண்டம் என்றே சொல்லவேண்டும்... //
உங்கள் பார்வையில் இந்த வரி சரியாக இருக்கக் கூடும் தோழரே ... வாழ்ந்து என்னத்தை கண்டேன் ,தற்கொலை செய்து கொண்டாலென்ன என்று தடுமாறிக்கொண்டிருக்கும் சற்று மன நலன் பாதிக்கப் பட்ட ஒருவனுக்கு இந்த கவிதை மேலை நாடுகளில் gloomy sunday பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை ... புத்தகங்களில் இந்த கவிதையை படித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன் ; இணையம் என்பது பொது வெளி ; சொந்தமாகவே தனக்கென டொமைன் வீடு வைத்திருந்தாலும் ..... நானொன்றும் கலாச்சார காவலனோ மானுடத்தின் இருண்ட பக்கங்களை பார்க்க மறுப்பவனோ இல்லை... பாசாங்குகள் அவசியமில்லை தாம் ; அதே சமயத்தில் எனது வரிகளிலும் எந்த பாசாங்குகளையும் காண முடியவில்லை என்னால் ...

நன்றிகள் பல தோழரே !

அ.முத்து பிரகாஷ் said...

பெருந்தேவி ...
நலம் தானே ...
இனிய இரவு தோழர்!
நட்புடன்
நியோ

Perundevi said...

Posting on behalf of Jamalan. He has written to me that he could not post his comment at my blog and gets error message.

Jamalan said:

அன்புள்ள நியோ


உங்கள் தொடர் பின்னோட்டத்திற்கு நன்றி. கவிதை குறித்த உங்கள் ஆர்வமும் ஆச்சர்யமாக உள்ளது.


//ஆமாம் தோழரே .... எனது பின்னூட்டங்கள் மட்டறுக்கப் பட்டது என்ற எனது முந்தைய பின்னூட்ட வரிகள் தவறான புரிதலால் எழுதப்பட்டவை என நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் ...//


உண்மைதான். அது எனது கவனக்குறைவுதான். பின்னோட்டங்களை அனுப்புதல் போஸ்ட் செய்தல் போன்றவற்றிற்கான நேர வித்தியாசங்களால் ஏற்படுவது.


//தோழரே ... எனக்கு மிகப் பிடித்தமான கோவை கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பாகை ருசித்து சாப்பிட்டுக் கொண்டே நான் கேட்டு மகிழ்ந்த gloomy sunday பாடலை ஏன் எனது நண்பன் தற்கொலை செய்வதற்கு முன் பலமுறை கேட்டுஎதை ரசித்தான் என்பதும் ஆச்சர்யமாக தான் உள்ளது ....//


தோழர்... நீங்கள் கூறுவதிலேயே வாசிப்பதும், புரிந்துகொள்வதும் ஒன்றுபோல இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பாருங்கள். உங்களால் பாடலாக இசையாக ரசிக்க முடிந்த ஒன்று உங்கள் நண்பனுக்கு வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. காரணம் பாடல் மட்டுமல்ல அதை கேட்பவரின் மனநிலையும் சேர்ந்தது. இந்த கவிதையிலும் வேறு வேறு வாசிப்புகள் சாத்தியம்தானே. அதனால் இது வாசிப்பு மற்றும் புரிதல் சார்ந்த பிரச்சனை. உங்களால் எளிமையாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.. உங்கள் நண்பனால் முடியாமல் போகிறதே ஏன்? நண்பனின் மனநிலைதான் இங்கு பிரச்சனையே ஒழிய பாடல் அல்ல. ஒரு பிரதி எல்லோரையும் ஒரேவிதமாக தூண்டாதுதானே.


//வாழ்ந்து என்னத்தை கண்டேன் ,தற்கொலை செய்து கொண்டாலென்ன என்று தடுமாறிக்கொண்டிருக்கும் சற்று மன நலன் பாதிக்கப் பட்ட ஒருவனுக்கு இந்த கவிதை மேலை நாடுகளில் gloomy sunday பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை ...//


நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல், நானும் கேட்டிருக்கிறேன் அது குறித்த பிண்ணனிகள் பற்றி வாசித்தும் இருக்கிறேன். அப்பாடல் ஒருவிதமான melancholy என்பார்களே அந்த மூடில் பாடப்பட்டது. அந்த பாடல் வந்த பின்னணி, இரண்டாம் உலகப்போர் மற்றும் Great Deperssion எனப்படும் பொருளாதார பெருமந்தம் போன்றவற்றால் உலகமே மிகவும் அபத்தமான ஒரு காலகட்டத்தில் இருந்தது. அக்காலகட்டம் உணர்ச்சி சுழிப்பான ஒரு காலகட்டம். அங்கு உணர்வுகள் என்பது உயிர்ப்புடன் அனுகப்பட்டது. ஆனால், இன்று உணர்வுகள் என்பது அபத்தமாக மாறிவிட்டது. தற்கொலை என்கிற துயரமான அவலம்கூட ஒரு காரணமற்ற உணர்வற்ற அபத்தமாக மாறிவிட்டது. இதைதான் இக்கவிதையில் என்னால் வாசிக்க முடிகிறது. அடுத்து அப்பாடலின் வரிகள் என்பது ஒருவகை நவீனத்துவம் கொண்டுவந்த ரொமாண்டிஸஸத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. அப்பாடலில் ஒரு மையம் காதல் பிரிவு வலி ஏக்கம் போன்ற ஒன்று உள்ளது. இன்றைக்கு அதாவது பின்நவீனத்துவமாகிவிட்ட ஒரு சமூகத்தில் இதெல்லாம் பொருளிழந்து உள்ளது. காதல் என்பது காஃபி ஷாப்புகள், லேசர் பூக்கள், வெப்காம்கள், சாட்டுகள் என மாறி உள்ளது. உடல் இருப்பு அவசியமற்ற ஒரு வலை சமூகத்தில் வாழ்கிறோம் நாம். இங்கு பெயர்களும், முகங்களும் எல்லாம் டிஜிட்டலின் நீல ஒளிச்சுடராக மட்டுமே எஞ்சி உள்ளது. ஆக, அப்பாடலின் உணர்வுத்தளமும் இக்கவிதையின் உணர்வு தளமும் வெவ்வேறானவை. இக்கவிதை அப்பாடலுக்கு நேர் எதிரான தளத்தில் பயணிக்கிறது. அப்பாடலின் வரிகளும் பொருளும், இக்கவிதைக்கு எந்தவகையிலும் பொறுத்தமற்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.


//புத்தகங்களில் இந்த கவிதையை படித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன் ; இணையம் என்பது பொது வெளி ; சொந்தமாகவே தனக்கென டொமைன் வீடு வைத்திருந்தாலும் ..... //


புத்தகங்கள், இணையம் எல்லாமே பொதுவெளிதான். அதில் பேரதிக வித்தியாசமில்லை. இணையத்தைவிட காலந்தாண்டியதாக இருக்கப்போவது புத்தகங்கள்தான்.


//நானொன்றும் கலாச்சார காவலனோ மானுடத்தின் இருண்ட பக்கங்களை பார்க்க மறுப்பவனோ இல்லை... பாசாங்குகள் அவசியமில்லை தாம் ; அதே சமயத்தில் எனது வரிகளிலும் எந்த பாசாங்குகளையும் காண முடியவில்லை என்னால் ...//


உங்களிடம் இத்தனை உரையாடலை சாத்தியமாக்கியிருப்பதே உங்களது பாசாங்கற்ற தன்மைதான். உங்களது புரிதலை முன்வைப்பதில் உங்களுக்கு தயக்கமில்லை. அதனால் அதில் பாசாங்கு இல்லை. இப்படி உரையாடித்தான் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் உங்களது கருத்துக்கள் ஆக்கபூர்வமானவைதான் நண்பரே.


உரையாடலுக்கு நன்றி.

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு பெருந்தேவி !

தவறான புரிதலின் வழியாக உங்களின் கவிதையை அணுகியது தோழர் ஜமாலனின் விளக்கங்களுக்கு பின்னர் தான் இப்போது எனக்கு உரைக்கின்றது....

கண்ணை மூடிக் கொண்டு வீசப்படும் மொண்ணை கத்திகளை கவிஞர்கள் கண்டு கொள்வதில்லை என அறிவேன் ...

வருகிறேன் தோழர் !

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு ஜமாலன் அவர்களுக்கு !

கவிதையை நான் சரிவர புரிந்து கொள்வதற்காய் முன்பின் தெரியாத என்னிடம் தாங்கள் காட்டும் பரிவு என்னை நெகிழச் செய்கின்றது ....

நாளை நான் ஊருக்கு செல்கிறேன் ... போய் வந்த பின்னர் அலை பேசியில் உங்களை அழைத்து நன்றிகளையும் அன்பையும் தெரிவித்து மகிழ்வேன் ...

தங்களின் தொடர் உரையாடல்கள் நீலச் சுடர் ஒளியை மயக்கமின்றி தெளிவாக நான் காண பேருதவி செய்கின்றன ...

தங்களின் அன்பின் விளக்கங்களுக்கு 'நன்றிகள் பல தோழரே ' என்ற சொற்றொடர் போதுமானதாக இருக்க முடியாது ...

வருகிறேன் அன்பு தோழர் !

Perundevi said...

நண்பர் நியோ,
நானும் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசிவிட்டேன்.
ஜமாலனும் நீங்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெருந்தேவி

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் ...

// நானும் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசிவிட்டேன். //
அதற்க்கு காரணம் நான் தானே ...
நீங்கள் என்ன செய்வீர்கள் ...

// ஜமாலனும் நீங்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. //
உங்களை விட பன்மடங்கு மகிழ்ச்சி எனக்கு ...
கவிதையை வாசிப்பது எப்படி என்பது கிளிப்பிள்ளைக்கு கூட புரிந்திருக்கும் ....

நன்றிகள் தோழர் ...

ஜமாலன் said...

அன்புள்ள நியோ...

உங்கள் புரிதலுக்கு நன்றி. கண்டிப்பாக பேசலாம். நீங்களும் தஞ்சாவூரா? நானும் அதே மாவட்டம்தான் கும்பகோணம்.

நான் ஜீன் 5 முதல் 28 வரை சென்னை மற்றும் குடந்தையில் இருப்பேன். நீங்கள் ஊரில் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். எனது மின்-அஞ்சல் jamalan.tamil@gmail.com

நன்றி.

Raja said...

தொடர் பின்னூட்டங்களை வாசித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு முறை என் கண்கள் நிறைந்துவிட்டன...நெகிழ்வாய் இருந்தது...