Monday, July 14, 2008

கேசவா

மூன்றாம் முறையாக
விபத்தை எதிர்த்து
வீடு மீண்ட என்னிடம்
அத்தையொருத்தி
கேசவா கேசவா என்று
இனியாவது சொல்லென்றாள்.
கேசவனைக் கூப்பிட்டால்
வாசல் வரும் விபத்து
வராந்தாவில் நின்றுவிடுமாம்.
அன்றிலிருந்து
ஆகாயம் முதல் நிலம் வரை
எதில் வேகஞ் சென்றாலும்
சொல்ல மறப்பதில்லை.
ஒருமுறை
தூக்கத்தில்
கேசவா என்றேன் போல.
கனவில்
என்னோடு
இயக்கத்திலிருந்த
சிநேகிதன்
கோபித்துப்போனவன்தான்.
இதுவரை
கண்ணுக்குத் திரும்பவில்லை.

10 comments:

Perundevi said...

என்ன சிரிப்பு அய்யனார்? :) இது பதிலுக்கு.

ஜமாலன் said...

இன்னாதிது...

'ஊரு அண்ணாச்சி ஊரு அண்ணாச்சி" என்றாளாம் கணவனைக்கண்ட மலையாளப்பெண்.
'தென்காசியம்மா தென்காசியம்மா' என்றானாம் நம்ம ஆளு.

அந்தக்கதையால இருக்கு. :)

ஊரு என்றால் மலையாளத்தில் உருவு என்று பொருள்.

Perundevi said...

ஜமாலன், ஜோக் பாதிதான் புரிந்தது. போகட்டும். ”இன்னாதிது?” என்றால் என்ன சொல்வது? ஓடிப்போன சிநேகிதன் கவிதைசொல்லியின் கண்ணுக்குத் திரும்பிவர கேசவனை பிரார்த்திக்க வேண்டுமோ என்னவோ :)

Unknown said...

கேசவன் யாருங்க- மிடில்கிளாஸ் மாதவன் பிரதர் இன் லாவா :)

Perundevi said...

யாருங்க மிடில்கிளாஸ் மாதவன்? உங்களுக்குத் தெரிஞ்சவங்களா? நமக்கு குடிக்கிற கிளாஸ் தானுங்க தெரியும்.

கோநா said...

பெருந்தேவி, :) :)

"எதில் வேகஞ் சென்றாலும் சொல்ல மறப்பதில்லை" என்ற வரிகளுக்கும் கனவில் சிநேகிதனின் இயக்கத்தில் நீங்கள் கேசவா கேசவா என்று சொன்னதுக்கும் உள்ள மெல்லிய தொடர்பின் எள்ளலுக்கே, என்னைப் போல (3 வருடங்களுக்கு முன்பு) அய்யனாரும் சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.

-அப்போதும் அம்மந்திரம் ஒரு முன்கோபியான சிநேகிதனின் பிடியிலிருந்து வேறு விபத்துகளுக்கு முன் உங்களைக் காப்பாற்றியே இருக்கிறது என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். :)

-இக்கவிதையை படித்து சிரித்து விட்டாவது உண்மையுணர்ந்து சிநேகிதன் திரும்பவும் உங்கள் கண்ணுக்குள் வந்திருப்பார் என நம்புகிறேன். :)

கோநா said...

பெருந்தேவி,

ஜமாலன் அவர்கள் சொன்ன ஜோக் இதுவாக இருக்குமென எண்ணுகிறேன். :)

தென்காசி ஆளுடன் மலையாளப் பெண் கள்ளக் காதலில் இயக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென அப்பெண்ணின் கணவன் வருவதைப் பார்த்தவள் (தன் குறியிலிருந்து காதலனின் குறியை) எடுக்கச் சொல்லி மலையாளத்தில் ஊரு என்று சொல்ல நம்மாளு ஊருபேர கேட்கறாங்கன்னு நினச்சு தென்காசியம்மா தென்காசியம்மான்னு சொல்றான். :)

Perundevi said...

கோநா, உங்கள் பின்னூட்டங்கள் ஜாலியாக இருக்கின்றன. ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன். கவிதையில் வருவது கவிதைசொல்லியின் குரல், கவிஞர் என்கிற தனிப்பட்ட நபரின் குரல் அல்ல. என் சில கவிதைகளின் கவிதைசொல்லி ஆண் ஆக இருப்பார்; சிலவற்றில் திருமணமான பெண்ணாக இருக்கும்; ஓரிரண்டில் கொலைசெய்பவராகக்கூட அல்லது அ (மூன்று புள்ளி) றிணை ஆகவும் இருக்கலாம். ஆனால் இப்பின்னூட்டத்தை எழுதும் “நான்” அது/அவன்/அவள்/அவர் அல்ல. :)

கோநா said...

பெருந்தேவி, விளக்கத்துக்கு நன்றி. எல்ல படைப்புகளும் படைப்பாளியின் சொந்த அனுபவம் என்று நம்பும் சிறு பிள்ளையல்ல நான். கவிதை சம்மந்தமாக நான் சொல்லும் "நீங்கள், உங்கள்" அந்தந்த கவிதைகளில் வரும் பாத்திரமாக மாறிய உங்களைத்தான் அதாவது அந்த பாத்திரத்தைத் தான்.



-ஆனால் உங்கள் கவிதைகளின் மூலம் நான் உங்களுக்கு ஒரு ஆளுமையை உருவகிக்கிறேன். அநேகமாய் எல்லா வாசகர்களும் எல்லா படைப்பாளிகளுக்கும் இப்படி செய்வார்கள் என நினைக்கிறேன்.

அப்படி சொன்னதுதான் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர் நீங்கள் என்று கூறியது.

Perundevi said...

நன்றி, கோநா. ஆனால், என் தன்னம்பிக்கை பலசமயம் என்னைவிட்டுப் போய்விடுகிறது. அந்த நேரத்தில் என்னை முழுக்க மறைத்துக்கொண்டுவிட வேண்டும் என்றும்.....